மன்னார் வைத்தியசாலைக்கு புதிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒப்பந்தம் கைச்சாத்து மன்னார் மாவட்ட பொது வைத்தி...
மன்னார் வைத்தியசாலைக்கு புதிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம்
ஒப்பந்தம் கைச்சாத்து
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு க்கு புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்றையும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சில்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் என சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.
600 மில்லியன்
குறித்த ஒப்பந்தத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசாங்கத்தால் இந்த திட்டத்திற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அனைத்துப் பணிகளும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்திற்கு பங்களிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், மேலதிக செயலாளர் (மேம்பாடு) சுனில் கலகம, பணிப்பாளர் (திட்டமிடல்) நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments